டெங்கு இல்லாத மாவட்டமாக உருவாகும் கொசு ஒழிப்பு பணியில் 100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்கள்


டெங்கு இல்லாத மாவட்டமாக உருவாகும் கொசு ஒழிப்பு பணியில் 100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 18 Oct 2017 4:15 AM IST (Updated: 18 Oct 2017 3:35 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் இதன் மூலம் 15 நாட்களில் வேலூர் டெங்கு இல்லாத மாவட்டமாக உருவாகும் என்றும் கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாவட்ட வருவாய்த்துறை சார்பில் டெங்கு ஒழிப்பு சிறப்பு முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரத்து 500 பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வேலூர் மாவட்டம் முழுவதும் 100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதன் மூலம் 15 நாட்களில் டெங்கு இல்லாத மாவட்டமாக உருவாகும்.

அரசு மட்டுமே டெங்குவை ஒழிக்க முடியாது. பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாவதற்கான அறிகுறிகள் இருந்தால் அந்த நிறுவனங்களுக்கு நோட்டீசு வழங்கப்படும். அவர்கள் 3 நாட்களில் கொசுப்புழு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், உதவி கலெக்டர் செல்வராஜ், மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன், தாசில்தார் பாலாஜி, மாநகராட்சி சுகாதார அலுவலர் மணிவண்ணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Related Tags :
Next Story