போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2017 4:15 AM IST (Updated: 18 Oct 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,

ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, நிலுவைத்தொகை உள்ளிட்ட பணப்பலன்களை அரசு வழங்காமல் காலம் கடத்துவதை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் அலுவலகம் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் குட்டப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தர்ராஜ் மற்றும் சின்னான்பிள்ளை, மாநில துணைத்தலைவர் பால்ராஜ், அரசு விரைவு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யூ. பொன்.சோபனராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யூ. தலைவர் லட்சுமணன் தொடங்கி வைத்து பேசினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story