தீபாவளி பண்டிகையையொட்டி அய்யலூர் சந்தையில் ஆடுகள் விலை உயர்வு
தீபாவளி பண்டிகையையொட்டி அய்யலூர் சந்தையில் ஆடுகள் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
வடமதுரை,
அய்யலூர் ஆட்டுச்சந்தையில் வாரந்தோறும் வியாழக் கிழமை அன்று ஆடு மற்றும் கோழி விற்பனை நடைபெறும். இந்த சந்தையில் அய்யலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். வெள்ளாடு, செம்மறியாடு, நாட்டுக்கோழிகள் உள்ளிட்டவைகள் இந்த சந்தையில் விற்பனை செய்யப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூர் சந்தையில் தான் அதிக அளவில் ஆடு, கோழிகள் விற்பனை நடைபெறுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களை சேர்ந்த வியாபாரிகள் ஆடு, கோழிகள் வாங்க வேண்டும் என்றால் அய்யலூர் சந்தைக்கு தான் வருகின்றனர்.
வழக்கமாக வியாழக்கிழமைகளில் நடைபெறும் இந்த சந்தை தீபாவளி, ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களிலும் நடத்தப்படும். அப்போது சந்தை முழுவதும் திருவிழா போல் வியாபாரிகள் கூட்டம் அலைமோதும். அதன்படி தீபாவளி பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளதையொட்டி நேற்று அய்யலூரில் ஆட்டுச்சந்தை நடந்தது.
அய்யலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடு, கோழிகளை விற்பனைக் காக சந்தைக்கு கொண்டுவந்திருந்தனர். ஆனால் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டு சந்தையில் வியாபாரிகளின் வருகை குறைவாகவே இருந்தது. இதனால் பண்டிகை காலங்களில் திருவிழா கோலம் பூண்டிருக்கும் சந்தை நேற்று களையிழந்த நிலையிலேயே காட்சியளித்தது.
இருந்த போதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ரூ.6,000-க்கு விற்பனையான செம்மறி ஆடு நேற்று ரூ.7,500-க்கும், ரூ.6000-க்கு விற்பனையான வெள்ளாடு ரூ.7000-க்கும் விற்பனை ஆனது.
இதே போல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஒரு கிலோ எடை கொண்ட நாட்டுக்கோழி ரூ.130-க்கு விற்பனையானது. நேற்று இதற்கு ரூ.260 வரை விலை கிடைத்தது. வியாபாரிகள் வருகை குறைந்தாலும், எதிர்பார்த்த விலையை விட கூடுதல் விலைக்கு ஆடு, கோழிகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story