மராட்டியத்தில் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
மராட்டியத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக நேற்று 2-வது நாளாக பஸ்கள் ஓடவில்லை. சங்க பிரதிநிதிகளுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
மும்பை,
மராட்டியம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் குதித்தனர்.
7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதன் காரணமாக ஒட்டு மொத்த பஸ்களும் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மும்பை உள்பட மராட்டியம் முழுவதும் அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் மாநிலத்தில் அனைத்து இடங்களிலும் பஸ் போக்குவரத்து அடியோடு முடங்கியது.
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் நிலையங்களில் திரண்ட பயணிகள் பரிதவித்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் பலர் விடிய, விடிய பஸ் நிலையங்களிலேயே பொழுதை கழித்தனர்.
இந்தநிலையில், போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை.
பஸ்கள் ஓடாததால் மாநிலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஊரக பகுதிகளை சேர்ந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அவர்கள் திட்டமிட்டபடி பயணங்களை மேற்கொள்ள முடியாமல் தவித்தனர்.
தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் கூட்டத்தை கருத்தில் கொண்டு தற்காலிகமாக பஸ் கட்டணத்தை 10 சதவீதம் வரையிலும் அதிகரித்து இருந்த நிலையில், இரண்டு நாட்களாக பஸ்கள் இயக்கப்படாமல் முடங்கி இருப்பது மாநில போக்குவரத்து கழகத்திற்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
மராட்டியத்தில் போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று மாநில அரசு எச்சரித்தது.
இருப்பினும் போக்குவரத்து ஊழியர்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை.
இதற்கிடையே நேற்று, போக்குவரத்து தொழிற்சங்க தலைவர்களுடன் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ரஞ்சித் சிங் தியோல், போக்குவரத்து கமிஷனர் பிரவின் கேதம், தலைமை செயலாளர் (போக்குவரத்து) மனோஜ் சவுனிக் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆயினும் இந்த பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. எனவே இன்றும் 3-வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை தொடர்வார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், உரிமம் வைத்திருக்கும் ஊர்க்காவல் படையினரை பஸ்களை இயக்குவதற்கு தற்காலிக டிரைவர்களாக பயன்படுத்த மாநில போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.
பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு
மராட்டியத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிராக மும்பை ஐகோர்ட்டில் 2 பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், “மராட்டிய அரசு போக்குவரத்து கழக பஸ்களில் தினசரி 65 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். போக்குவரத்து ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். பொதுமக்களுக்கான அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்று அரசு மற்றும் கோர்ட்டு உத்தரவுகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த மனுக்கள் நீதிபதி எஸ்.கே.ஷிண்டே முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதி 2 மனுக்கள் மீதான விசாரணையையும் வருகிற வெள்ளிக்கிழமைக்கு (நாளை) ஒத்தி வைத்தார்.
மனுதாரர்களின் வக்கீல் பூஜா தோரட் கூறுகையில், ‘தீபாவளி சீசனில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பது தெரிந்தும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களது கோரிக்கைகள் பேசி தீர்க்கப்பட வேண்டும். அதை விடுத்து பண்டிகை நேரத்தில் வேலை நிறுத்தம் செய்வது சரியானது அல்ல’ என்றார்.

Related Tags :
Next Story