மும்பை-நாகர்கோவில் இடையே தூக்கத்தை தொலைக்கும் ரெயில் பயணத்துக்கு விடிவு காலம் எப்போது?
மும்பை-நாகர்கோவில் இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளின் தூக்கத்தை தொலைத்து வருகிறது. இந்த நிலை மாறுவது எப்போது என்று பயணிகள் ஏக்கம் தெரிவித்து உள்ளனர்.
மும்பை,
தொலைதூரத்திற்கு பயணம் செல்லும் பலரும் விரும்புவது ரெயில் பயணத்தை தான். ரெயில் பயணம் வசதியானது என்பது மக்களின் மனதில் பதிந்துவிட்ட ஒன்று. சிறந்த அனுபவமாகவும் ரெயில் பயணங்கள் சொல்லப்படுவது உண்டு.
ஆயினும் இந்த வசதி அனைத்து ரெயில் பயணிகளுக்கும் அமைந்து விடுவதில்லை. மும்பையில் வசிக்கும் தென்னக தமிழ் மக்கள் இரவு தூக்கத்தை தொலைத்து பயணம் செய்யும் அவல நிலையில் தான் இருந்து வருகிறார்கள்.
மும்பையில் வசிக்கும் தமிழ் மக்களின் வசதிக்காக சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நாகர்கோவிலுக்கு ‘நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்’ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வாரத்தில் 6 நாட்கள் இரண்டு மார்க்கங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது மும்பை- நாகர்கோவில் இடையே 16339 என்ற எண்ணில் புனே, கிருஷ்ணராஜபுரம், திருப்பத்தூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு நாட்களும், 16351 என்ற எண்ணில் புனே, ரேணிகுண்டா ஜங்ஷன், திருத்தணி, செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக வாரத்தில் செவ்வாய், சனி ஆகிய இரண்டு நாட்களும் இயக்கப்பட்டு வருகிறது.
தென் தமிழகத்தின் பிரதான ரெயில் நிலையமாக கருதப்படும் திருநெல்வேலிக்கு தாதரில் இருந்து வாரத்தில் செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் யஸ்வந்த்பூர் வழியாக சாளுக்கியா எக்ஸ்பிரசும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கொங்கன் வழித்தடத்தில் நெல்லை அதிவிரைவு ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது.
சாளுக்கியா, நெல்லை அதிவிரைவு ரெயில்களில் கேண்டீன் கிடையாது. நாகர்கோவில் எக்ஸ்பிரசில் கேண்டீன் வசதி இருப்பதால் தமிழர்கள் மத்தியில் அந்த ரெயிலுக்கு அதிக வரவேற்பு உண்டு.
இரண்டு மார்க்கத்திலும் மும்பை- நாகர்கோவில் இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு வரும் போது தமிழக பகுதிகளில் பகல் நேரத்தில் பயணிக்கிறது. இது தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் இந்த ரெயில்கள் மும்பையில் இருந்து செல்லும் போது தமிழகத்தில் இரவு நேரத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
சேலம் வழியாக நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பையில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மறுநாள் இரவு 8.55 மணிக்கும், விருதுநகருக்கு 10.23 மணிக்கும், சாத்தூருக்கு 10.43 மணிக்கும், கோவில்பட்டிக்கு 11.03 மணிக்கும், வாஞ்சி மணியாச்சிக்கு 11.40 மணிக்கும், அங்கிருந்து 29 கி.மீ. தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நள்ளிரவு 1.25 மணிக்கும், நாங்குநேரிக்கு 1.59 மணிக்கும், வள்ளியூருக்கு 2.08 மணிக்கும், நாகர்கோவிலை 3.20 மணிக்கு சென்றடைகிறது. ரேணிகுண்டா ஜங்ஷன் வழியாக வரும் ரெயில் திருச்சிக்கு மறுநாள் இரவு 7 மணிக்கும்,
திண்டுக்கலுக்கு 8.10 மணிக்கும், மதுரைக்கு 9.55 மணிக்கும், சாத்தூருக்கு 11.10 மணிக்கும், கோவில்பட்டிக்கு 11.32 மணிக்கும், கடம்பூருக்கு 11.54 மணிக்கும், வாஞ்சி மணியாச்சிக்கு 12.14 மணிக்கும், திருநெல்வேலிக்கு 2.15 மணிக்கும், வள்ளியூருக்கு 2.54 மணிக்கும், நாகர்கோவிலுக்கு 4.15 மணிக்கும் செல்கிறது.
இதனால் மும்பையில் இருந்து இந்த ரெயில்களில் செல்லும் பயணிகள் மதுரைக்கு அடுத்து இரவில் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். தாங்கள் இறங்க வேண்டிய இடத்திற்காக தூக்கத்தை தொலைத்து காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.
இது பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதுமட்டுமின்றி நள்ளிரவு நேரத்தில் கொண்டு போய் விடுவதால் சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதி இன்மை காரணமாக பயணிகள் விடியும் வரையிலும் ரெயில் நிலையத்திலேயே காத்து கிடக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. முதியவர்களும், நோயாளிகளும், குழந்தைகளும் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள்.
எனவே நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலிக்கு நள்ளிரவு வந்து சேருவதை தென்தமிழக மக்கள் விரும்பவில்லை. நள்ளிரவில் வந்து சேர்வதால் ஏற்படும் சிரமங்களை களைய நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பையில் கிளம்பும் நேரத்தை மாற்ற வேண்டும் என்பது தமிழர்களின் பல ஆண்டுகால கோரிக்கை ஆகும்.
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க வேண்டும் என்பதும் தமிழ் பயணிகளின் ஆவல். இரண்டு மார்க்கத்திலும் இயக்கப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், மும்பையில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் வகையில் ரெயில் கால அட்டவணை அமைக்க வேண்டும். ரெயிலின் வேகத்தை அதிகரித்து தமிழக பகுதிகளில் பகல் நேரங்களில் பயணிக்க செய்து நாகர்கோவிலுக்கு இரவு 9 மணிக்கு வந்து சேருமாறு இயக்க வேண்டும் என்பது தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மும்பை தமிழின ரெயில் பயணிகள் நலச்சங்கமும் இதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் நிர்வாகிகள் ரெயில்வே மந்திரியையும், அதிகாரிகளையும் சந்தித்து தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் அப்போதைய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்றி தினசரி இயக்குவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மும்பை தமிழின ரெயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்து இருந்தார்.
ரெயில்வேயின் அந்த அறிவிப்பு இன்று வெளியாகுமா? நாளை வெளியாகுமா? என தமிழ் மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி காத்து இருக்கின்றனர். ஆனால் ரெயில்வே துறையின் படிகளை பலமுறை ஏறி, இறங்கி விட்ட நிலையில் இதுவரையிலும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் நேரம் மாற்றம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏதோ காரணத்திற்காக இதுவரை தமிழ் பயணிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
தமிழ் மக்களின் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணம் சுகமாவது எப்போதோ?. பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Tags :
Next Story