புதுக்கோட்டை அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் பலி
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள கே.பி.தளவாய்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகநயினார் மனைவி சுப்புலட்சுமி (வயது 40).
தூத்துக்குடி,
நேற்று முன்தினம் காலையில் சுப்புலட்சுமி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க, ஆட்டோ டிரைவரான தனது தம்பி மாரியப்பனுடன் (36) மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி வந்தார். பின்னர் அவர்கள் வீடு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிள் புதுக்கோட்டை அருகே உள்ள மங்களகிரி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். மாரியப்பன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவர் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சிப்பிகுளத்தை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Tags :
Next Story