எலக்ட்டிரிக்கல் குடோனில் பயங்கர தீ பட்டாசு வெடித்த போது விபத்தா?


எலக்ட்டிரிக்கல் குடோனில் பயங்கர தீ பட்டாசு வெடித்த போது விபத்தா?
x
தினத்தந்தி 19 Oct 2017 4:30 AM IST (Updated: 19 Oct 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் ராமசாமியா புரத்தில் அருணாசலம்(வயது 49) என்பவர் எலக்ட்டிரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

நெல்லை,

 கடையின் அருகே அவருக்கு சொந்தமான எலக்ட்டிரிக்கல் குடோன் உள்ளது. இந்த நிலையில் தீபாவளி தினமான நேற்று மதியம் இந்த குடோனில் தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்தனர். அதற்குள் தீ குடோன் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

தீயணைப்பு படையினர் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கட்டிற்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் குடோனில் இருந்த எலக்ட்டிரிக்கல் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். யாரோ பட்டாசுவை கொளுத்தி போட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story