கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி


கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 19 Oct 2017 3:54 AM IST (Updated: 19 Oct 2017 9:50 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டம் நந்தி மலைப்பகுதியில் உள்ள சன்னாகிரி நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலம் வாய்ந்தது.

சிக்கபள்ளாபூர்,

 நேற்று அந்த நீர்வீழ்ச்சியின் அருகே உள்ள பாறையில் நின்றவாறு நவீன்குமார் (வயது 21) என்பவர், செல்போனில் உற்சாகமாக ‘செல்பி’ எடுத்து கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென அவர் கால் தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்தார். இதனால், அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் தொட்டபள்ளாபுரா பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படித்து வந்தது தெரியவந்தது.

Next Story