தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்குகளுக்கு ஆதார் எண், செல்போன் எண் கட்டாயம்


தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்குகளுக்கு ஆதார் எண், செல்போன் எண் கட்டாயம்
x
தினத்தந்தி 20 Oct 2017 2:00 AM IST (Updated: 19 Oct 2017 6:01 PM IST)
t-max-icont-min-icon

தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்குகளுக்கு ஆதார் எண், செல்போன் எண் கட்டாயம் என்று தூத்துக்குடி தபால் கோட்ட கண்காணிப்பாளர் ராமசாமி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்குகளுக்கு ஆதார் எண், செல்போன் எண் கட்டாயம் என்று தூத்துக்குடி தபால் கோட்ட கண்காணிப்பாளர் ராமசாமி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

ஆதார் எண்

தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்குகளுக்கு ஆதார் எண், செல்போன் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதனால் ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் வருகிற டிசம்பர் மாதம் 31–ந் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணையும், செல்போன் எண்ணையும் சமர்ப்பிக்க வேண்டும். புதிய கணக்கு தொடங்குபவர்களும் கட்டாயமாக ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு சேமிப்பு கணக்கு மட்டுமின்றி, பொது சேமநலநிதி, தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம், தொடர் வைப்பு நிதி, குறித்த கால கணக்கு உள்ளிட்ட தபால் நிலையத்தில் உள்ள அனைத்து சிறுசேமிப்பு கணக்குகளுக்கும் பொருந்தும்.

டிசம்பர் 1–ந் தேதி

மேலும் டிசம்பர் மாதம் 1–ந் தேதி முதல் மாதாந்திர கணக்குக்கான வட்டி, மூத்த குடிமக்கள் கணக்குக்கான வட்டி மற்றும் தபால் நிலையத்தில் உள்ள அனைத்து கணக்குகளுக்கான முதிர்வு தொகையையும் சேமிப்பு கணக்கு மூலம் மட்டுமே பெற முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story