மூலைக்கரைப்பட்டி அருகே கோழிப்பண்ணையில் தீவிபத்து; ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
மூலைக்கரைப்பட்டி அருகே கோழிப்பண்ணையில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
இட்டமொழி,

கோழிப்பண்ணை
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேலநாச்சான்குளத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி மாமாச்சி (வயது 31). இவர்களுக்கு சொந்தமான கோழிப்பண்ணை வீட்டின் அருகே அமைக்கப்பட்டு உள்ளது. தங்கவேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் கோழிப்பண்ணையை மாமாச்சியின் சகோதரர் செல்வராஜ் (41) என்பவர் பராமரித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோழிப்பண்ணையில் 2 கொட்டகையில் கோழிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. தீபாவளி பண்டிகைக்காக கோழிகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு விட்டன. இதனால் கோழிப்பண்ணை காலியாக இருந்தது.
தீயில் எரிந்து நாசம்
இந்த நிலையில் தீபாவளி அன்று கோழிப்பண்ணையின் மேற்கூரையில் தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பற்றி எரிந்தது. அந்த சமயத்தில் காற்று பலமாக வீசியதால் 2 கொட்டகையிலும் தீ பரவியது. இதுகுறித்து உடனடியாக நாங்குநேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு தீயணைப்பு வண்டி இல்லாததால், வள்ளியூர், திசையன்விளை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 2 நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் கோழிப்பண்ணை, அதில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் மாமாச்சி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது தீபாவளியன்று யாரேனும் பட்டாசு வெடித்ததில் அதில் இருந்து வந்த தீப்பொறி விழுந்து தீ விபத்து ஏற்பட்டதா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story