புளியம்பட்டி அருகே பரபரப்பு குழந்தையை கொன்று தாய் தூக்கு போட்டு தற்கொலை
புளியம்பட்டி அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓட்டப்பிடாரம்,
புளியம்பட்டி அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூலி தொழிலாளி
ஓட்டப்பிடாரம் தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள களப்பைப்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகன் முத்துமாரி (வயது 28). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாரதி (25) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் காருன்யா என்ற பெண் குழந்தை இருந்தது. பாரதியும் கூலி வேலை பார்த்து வந்தார்.
பாரதி உடல் நலம் பாதிக்கப்பட்டு, அதற்காக கடந்த ஒரு ஆண்டாக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் பாரதிக்கு உடல் நலம் சரியாகவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலையில் முத்துமாரி தனது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்று விட்டாராம்.
தாய்–மகள்
இந்த நிலையில் மாலையில் வீட்டில் தனியாக இருந்த பாரதி, தனக்கு உடல் நலம் சரியாகவில்லை என்பதை நினைத்து மனமுடைந்து காணப்பட்டார். ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். ஆனால் தனக்கு பின்னர் தன் மகளை யார் பார்த்து கொள்வார் என்று நினைத்த பாரதி, தனது குழந்தையையும் கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி வீட்டில் மின் விசிறி தொங்க விடப்படும் இரும்பு வலைவு கம்பியில் தன் சேலையால் தூக்கு மாட்டி, அதில் தனது குழந்தையை தொங்க விட்டு கொலை செய்தார். பின்னர் அதன் அருகே இருந்த மற்றொரு வலைவு கம்பியில் சேலையால் தூக்கு போட்டு பாரதி தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் உடனடியாக முத்துமாரிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் நாரைகிணறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சோகத்தில் மூழ்கிய கிராமம்
இதனையறிந்த நாரைகிணறு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஞானராஜ், சப்–இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் தாய் மற்றும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாரைகிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Related Tags :
Next Story