வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு


வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Oct 2017 2:30 AM IST (Updated: 19 Oct 2017 8:41 PM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.

வள்ளியூர்,

வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

உள்நோயாளிகள் அறை முழுவதும் நோயாளிகள் தங்கியிருந்ததால் இடமின்றி வராண்டாவிலும் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அப்போது அவர்கள், உள்நோயாளிகள் தங்க போதிய இடவசதி செய்து கொடுக்க வேண்டும், ஆஸ்பத்திரியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு கலெக்டர், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது இன்பதுரை எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தில் பசுமை கரங்கள் அமைப்பின் சார்பில், மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். டாக்டர்கள் கவிதா, துரை, ருக்மணி, பசுமை கரங்கள் அமைப்பை சேர்ந்த வெங்கட்ராமன், ராமமூர்த்தி, சேதுராமலிங்கம், அ.தி.மு.க. நிர்வாகிகள் அழகானந்தம், அந்தோணி அமலராஜா, தவசிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story