கலெக்டர் ஆய்வு
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை கலெக்டர் பொன்னையா நேரில்
காஞ்சீபுரம்,
வார்டு வார்டாக சென்று பார்வையிட்டு அவர்களுக்கு வழங்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் நோயாளிகளிடம் டாக்டர்கள் நல்லமுறையில் சிகிச்சை அளிக்கிறார்களா?, குறைகள் ஏதேனும் உள்ளதா? என்றும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:–
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு அறிகுறி உள்ள 7 பேர் கண்டறியப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 4 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்ப உள்ளார்கள். மீதமுள்ள 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அருகில் உள்ள அந்திரசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதியை பார்வையிட்டு சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விடுதி காப்பாளருக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளர் டாக்டர் சசிகலா மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் உடன் இருந்தனர்.