சுங்கான்கடை அருகே கார், குளத்தில் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்


சுங்கான்கடை அருகே கார், குளத்தில் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Oct 2017 4:30 AM IST (Updated: 20 Oct 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

சுங்கான்கடை அருகே கார், குளத்தில் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்

அழகியமண்டபம்,

திங்கள்சந்தை அருகே ஆலங்கோட்டை சேர்ந்தவர் அனிஷ்பாபு. இவருடைய மனைவி சுஜித்ரா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் அனிஷ்பாபு, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாகர்கோவிலில் இருந்து திங்கள்சந்தை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். சுங்கான்கடை அருகே தோட்டியோட்டில் சென்ற போது, எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக அனிஷ்பாபு காரை சாலையோரம் ஒதுக்கினார். அப்போது, கார் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி அருகில் இருந்த குளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்து அலறினர். உடனே, அருகில் நின்றவர்கள் விரைந்து வந்து, காரில் இருந்தவர்களை மீட்டு பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபோல், நேற்று முன்தினம் நாகர்கோவிலில் இருந்து பத்மநாபபுரத்திற்கு ஒரு சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. காரில் நெல்லையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருந்தனர். சுங்கான்கடை அருகே தோட்டியோட்டில் சென்றபோது, பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக காரின் பின்பகுதியில் மோதியது. இதில் காரின் பின்பகுதி சேதமடைந்தது. மேலும், சுற்றுலா பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்துகள் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Tags :
Next Story