திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை


திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
x
தினத்தந்தி 20 Oct 2017 4:45 AM IST (Updated: 20 Oct 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார்.

அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் ரத்தினமணி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 35). இவர் கத்தாரில் டிரைவர் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரஜினி (30) என்பவருக்கும் 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. ரத்தினமணியின் வீட்டின் மாடியில் ரஜினி, குழந்தையுடன் வசித்து வந்தார்.

ரஜினி தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் தாய் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று மாலை 4 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது ரத்தினமணி, மனைவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார். ரஜினி வீட்டில் இருந்து 4.30 மணி அளவில் புகையாக வந்தது. அதே சமயம் குழந்தையின் அழுகுரலும் கேட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று மாடி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு ரஜினி உடல் முழுவதும் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அதே சமயம் பக்கத்து அறையில் குழந்தை அழுது கொண்டே இருந்தது.

இதுபற்றி அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது ரஜினி ஸ்டவ் அடுப்பில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது. ரஜினியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் ஆர்.டி.ஓ. ஜானகி விசாரணை நடத்த உள்ளார்.


Related Tags :
Next Story