சித்த மருத்துவம் குறித்து தெரியாதவர் நிலவேம்பு கசாயம் பற்றி பேசக்கூடாது கமல்ஹாசன் கருத்துக்கு கண்டனம்


சித்த மருத்துவம் குறித்து தெரியாதவர் நிலவேம்பு கசாயம் பற்றி பேசக்கூடாது கமல்ஹாசன் கருத்துக்கு கண்டனம்
x
தினத்தந்தி 20 Oct 2017 4:30 AM IST (Updated: 20 Oct 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு, பன்றி, விஷக் காய்ச்சலை நிலவேம்பு கசாயம் உடனடியாக குணப்படுத்தும். எனவே சித்த மருத்துவம் குறித்து தெரியாதவர் நிலவேம்பு கசாயம் பற்றி பேசக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை,

நாகசக்தி அம்மன் தெய்வீக மூலிகை ஆராய்ச்சி நிலையம் மூலம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் டெங்கு, பன்றி, விஷக்காய்ச்சலை உடனடியாக குணப்படுத்தும் நிலவேம்பு கசாயத்தை கண்டுபிடித்தோம். பின்னர் அப்போதைய முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து நிலவேம்பு கசாயத்தை குறித்து விளக்கினோம்.

அதன் பயனாக முதல்- அமைச்சர் 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி டெங்கு காய்ச்சலை குணப் படுத்தக்கூடியது நிலவேம்பு கசாயம் என்று சட்டசபையில் அறிவித்தார். அதன் பின்னர் தமிழக மக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வந்ததால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நிலவேம்பு கசாயம் குறித்து கூறினோம். அவரும் உடனடியாக இந்த கசாயத்தை வழங்க உத்தரவிட்டார்.

இதற்கிடையே, நடிகர் கமல்ஹாசன் நிலவேம்பு கசாயத்தை ஆராய்ச்சி செய் யாமல் வழங்கக்கூடாது என்றும், அதை வழங்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தனது ரசிகர்களுக்கு கூறி உள்ளார். சித்த மருத்துவம் பற்றி எதுவுமே தெரியாத நடிகர் கமல்ஹாசன், நிலவேம்பு கசாயம் பற்றி கருத்து தெரிவித்தது கண்டனத்துக் குரியது.

நிலவேம்பு கசாயத்தில் நிலவேம்பு செடி, சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிக்காய், அசுவகந்தா, மஞ்சள் தூள், நன்னாரி வேர் உள்பட பல்வேறு மூலிகைகள் சேர்க் கப்பட்டு உள்ளன. இதை குடித்தால் ஆண்மை குறைவு ஏற்படாது. ஆண்மை அதிகரிக்கதான் செய்யும். பக்க விளைவுகளும் இல்லை. அத்துடன் டெங்கு, பன்றி, விஷக்காய்ச்சல் உடனடியாக சரியாகிவிடும். எனவே உடனடியாக நடிகர் கமல்ஹாசன் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story