பாக்கு மரத்தை சாய்த்தபோது மின்சாரம் தாக்கி காட்டு யானை சாவு
பாக்கு மரத்தை சாய்த்தபோது மின்சாரம் தாக்கி காட்டு யானை பரிதாபமாக இறந்தது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லிதுறை நந்தவனப்புதூரில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் தென்னை, பாக்கு மரங்கள் மற்றும் மஞ்சளும் பயிரிடப்பட்டு உள்ளது.
தோட்டத்தின் மத்திய பகுதியில் மின்சார வாரியம் சார்பில் உயர்மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று தோட்டத்துக்குள் புகுந்தது.
பின்னர் அந்த யானை அங்கு பயிரிடப்பட்டு இருந்த பாக்கு மரத்தை துதிக்கையால் வளைத்து பாக்கு மட்டைகளை தின்ன முயற்சித்தது. அப்போது அந்த மரத்தின் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பிகளின் மீது பாக்கு மரத்தின் கிளை உரசியது. இதில் மரத்தின் வழியாக மின்சாரம் பாய்ந்து, காட்டு யானையை தாக்கியது.
மின்சாரம் தாக்கியதில் காட்டு யானையின் தும்பிக்கை கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் மற்றும் வனத்துறையினர், அரசு கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் மனோகரன் மற்றும் துடியலூர் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, மின்சாரம் தாக்கி இறந்தது 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானையாகும். உணவு தேடி வந்த காட்டு யானை பாக்கு மரத்தை சாய்த்தபோது மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. இறந்த யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பகுதியிலேயே குழிதோண்டி புதைக்கப்பட்டது, என்றனர். மின்சாரம் தாக்கி யானை உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள கிராம மக்களிடையே காட்டுத்தீபோல் பரவியது.
பின்னர் அவர்கள் வந்து காட்டு யானைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சோகத்துடன் சென்றனர்.

Related Tags :
Next Story