ஏலச்சீட்டு மோசடி செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த தம்பதி தற்கொலை


ஏலச்சீட்டு மோசடி செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த தம்பதி தற்கொலை
x
தினத்தந்தி 20 Oct 2017 4:37 AM IST (Updated: 20 Oct 2017 4:37 AM IST)
t-max-icont-min-icon

துமகூரு மாவட்டம் கொரட்டகெரே டவுனில் வசித்து வந்தவர் ரவி. இவருடைய மனைவி பிரபா. இந்த தம்பதி ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

பெங்களூரு,

பின்னர், அவர்கள் முறையாக ஏலச்சீட்டை நடத்தாமல் ரூ.5 கோடியை பொதுமக்களிடம் வசூலித்துவிட்டு தலைமறைவானார்கள். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவி-பிரபா தம்பதியை கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் 2 பேரும் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணமோசடியில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த தம்பதி ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தனர். இதற்கிடையே, ரவி-பிரபா தம்பதி மனம் உடைந்து காணப்பட்டனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு ரவி தனது அறையில் தூக்குப்போட்டும், அவருடைய மனைவி பிரபா விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர். ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்து கைதான மனவருத்தத்தில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து, கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story