திசையன்விளையில் ரூ.7 லட்சத்தில் புதிய கலையரங்கம் இன்பதுரை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
திசையன்விளை கக்கன்நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் செலவில் புதிதாக கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடந்தது.
திசையன்விளை,
திசையன்விளை கக்கன்நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் செலவில் புதிதாக கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடந்தது.
திசையன்விளை நகரப்பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் நவராஜ் தலைமை தாங்கினார். ராதாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமலராஜா முன்னிலை வகித்தார். இன்பதுரை எம்.எல்.ஏ. புதிய கலையரங்கத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பின்னர் அவர் பேசுகையில், வருகிற 12–ந் தேதி முதல்–அமைச்சர் பழனிசாமி நெல்லைக்கு வருகிறார்.
திசையன்விளைக்கு பெரிய அறிவிப்பை (திசையன்விளை தனி தாலுகா) வெளியிட உள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். விழாவில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் நகரப்பஞ்சாயத்து அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story