மேற்கூரை இடிந்து விழுந்து 8 பேர் சாவு: நாகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்


மேற்கூரை இடிந்து விழுந்து 8 பேர் சாவு: நாகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Oct 2017 4:00 AM IST (Updated: 21 Oct 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

பொறையாறு பணிமனை மேற்கூரை இடிந்து விழுந்து 8 பேர் இறந்தனர். இதனை கண்டித்து நாகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் பொறையாறில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை மேற்கூரை நேற்று அதிகாலை இடிந்து விழுந்ததில், அங்கு ஓய்வு எடுத்து கொண்டிருந்த டிரைவர்கள், கண்டக்டர் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதைதொடர்ந்து அரசின் அலட்சியபோக்கை கண்டித்தும், மேற்கூரை இடிந்து விழுந்ததில் இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகை மண்டலத்துக்குட்பட்ட நாகை, வேதாரண்யம், பொறையாறு, மயிலாடுதுறை, சீர்காழி, காரைக்கால், சிதம்பரம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் உள்பட 11 பணிமனைகளை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தத்தை தொடர்ந்து நாகை பணிமனையில் இருந்து செல்லும் 60 பஸ்களில் 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அந்த பஸ்கள் பணி மனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் நாகையில் இருந்து வெளியூர் செல்ல இருந்த பயணிகள் பஸ்கள் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். 

Related Tags :
Next Story