டிரைவர்கள்-கண்டக்டர்கள் வேலை நிறுத்தம்: பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அவதி
டிரைவர்கள்- கண்டக்டர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சீர்காழி, மயிலாடுதுறையில் பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
சீர்காழி,
நாகை மாவட்டம் பொறையாறில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இங்கு உள்ள ஓய்வு எடுக்கும் அறையில் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு டிரைவர்கள், கண்டக்டர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 3 மணி அளவில் கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பணிமனையில் ஓய்வு எடுத்த போக்குவரத்து தொழிலாளர்கள் 8 பேர் இறந்த தகவல் அறிந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழி, மயிலாடுதுறை, பொறையாறு, நாகை உள்ளிட்ட ஊர்களில் பஸ்கள் ஓடவில்லை. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டனர். கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் ஒட்டு மொத்தமாக இயக்கப்படாததால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
வெறிச்சோடிய பஸ்நிலையங்கள்
டிரைவர்கள்-கண்டக்டர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பஸ்கள் ஓடாததால் சீர்காழி, மயிலாடுதுறையில் உள்ள பஸ் நிலையங்கள் நேற்று பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இந்த பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சம்பவம் நடந்த பொறையாறு பணிமனையை சீர்காழி, மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து இறந்தவர்களின் வீடுகளுக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் திரளாக சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது போக்குவரத்து தொழிலாளர்கள் கருப்பு சின்னம் அணிந்து இருந்தனர்.

Related Tags :
Next Story