விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பேராவூரணி,
பேராவூரணியில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் ஏற்பட்ட மனவேதனை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கும், பயிர் கருகிய அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கருணாமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சித்திரவேலு, நிர்வாகிகள் பாரதிநடராஜன், கோபால், ஸ்டாலின்பிரபு, ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல செங்கமங்கலம், திருச்சிற்றம்பலம், வலபிரமன்காடு, சித்தாதிக்காடு, புனல்வாசல், பின்னவாசல் உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

Related Tags :
Next Story