அம்மா திட்ட சிறப்பு முகாம்களில் விஜயகுமார் எம்.பி. ஆய்வு
குமரி மாவட்டத்தில் நடந்த அம்மா திட்ட சிறப்பு முகாம்களில் விஜயகுமார் எம்.பி. ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்,
அம்மா திட்டத்தின் நான்காம் கட்ட சிறப்பு முகாம் குமரி மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுகாக்களிலும் நேற்று நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் புத்தேரி வருவாய் கிராமத்துக்கு மட்டும் புத்தேரியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியிலும், தோவாளை தாலுகாவில் திருப்பதிசாரம் வருவாய் கிராமத்திற்கு திருப்பதிசாரம் அரசு உயர்நிலைப்் பள்ளியிலும், கல்குளம் தாலுகாவில் மேக்கோடு வருவாய் கிராமத்திற்கு முகிலன்கரை அரசு தொடக்கப் பள்ளியிலும், விளவங்கோடு தாலுகாவில் மிடாலம் “ஏ“ வருவாய் கிராமத்திற்கு மங்கலகுன்று புனித பெர்னதெத் மேல்நிலைப் பள்ளியிலும் நடந்தன.
இந்த சிறப்பு முகாம்களில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
இந்தநிலையில் நாகர்கோவில் புத்தேரி அரசு பள்ளியில் நடந்த முகாமின்போது அங்கு சென்ற விஜயகுமார் எம்.பி. மனுக்கள் பெறுவதை ஆய்வு செய்தார். அவரது முன்னிலையில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கோரி மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளை விஜயகுமார் எம்.பி. கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர் தோவாளை, கல்குளம், விளவங்கோடு தாலுகா பகுதிகளில் நடந்த அம்மா திட்ட சிறப்பு முகாம்களையும் ஆய்வு செய்தார். இவர் ஆய்வுக்கு சென்றிருந்த நேரத்தில் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த பலரிடம் அதிகாரிகளை உடனடியாக விவரங்களை சரிபார்க்கச்செய்து, அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைப்பதற்கான உறுதியை அதிகாரிகள் மூலம் அளித்தார். இவ்வாறு நேற்று நடந்த 4 அம்மா திட்ட முகாம்களில் சுமார் 60 பேருக்கு முதியோர் உதவித்தொகை கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அவர் அதிகாரிகள் மூலம் மேற்கொண்டார். இதனால் விண்ணப்பம் அளித்தவர்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு, விஜயகுமார் எம்.பி.க்கு நன்றியையும் தெரிவித்துச் சென்றனர்.
விஜயகுமார் எம்.பி.யுடன் குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கனகராஜ், ஆனந்த் மற்றும் ஏராளமானோர் உடன் சென்றிருந்தனர்.

Related Tags :
Next Story