கொடியேற்றத்துடன் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது 25-ந் தேதி சூரசம்ஹாரம்
சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கொடியேற்றத்துடன் நேற்று கந்தசஷ்டி விழா தொடங்கியது. வருகிற 25-ந் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் நேற்று கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் வருகிற 26-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
சேலம் உடையாப்பட்டி கந்தாசிரமத்தில் கந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று காலை 9 மணிக்கு ஞான ஸ்கந்த குருநாதரிடமிருந்து சக்திவேல் பெற்று மகாலட்சுமி துர்கா பரமேஸ்வரியிடம் வைத்து கந்தசஷ்டி விழா தொடங்கியது. மேலும், கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் சந்தசஷ்டி விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 26-ந் தேதி வரை தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படுகிறது. 25-ந் தேதி காலை 8 மணிக்கு மகா சஷ்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனையும், அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சேவல்கொடி, மயில் வாகனத்துடன் ஆறுமுகப் பெருமான் காட்சி அளித்தல், தீபாராதனை நடைபெறுகிறது. 26-ந் தேதி மதியம் 12 மணிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.
இதேபோல், ஊத்துமலை முருகன் கோவில், பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் நேற்று கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படுகிறது. சேலம் சுகவனேசுவரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி வருகிற 25-ந் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் கந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று மூலவர் பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்த உற்சவர் சண்முகநாதருக்கு நீல நிறத்தில் பட்டு சாத்தியும், பூ மாலைகளால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story