மேளப்பூடி, குருவராஜகண்டிகை ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்


மேளப்பூடி, குருவராஜகண்டிகை ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 22 Oct 2017 4:15 AM IST (Updated: 22 Oct 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா மேளப்பூடி ஊராட்சியில் அம்மா திட்டமுகாம் பொம்மராஜுப்பேட்டை கிராமத்தில் நடந்தது.

பள்ளிப்பட்டு,

இந்த முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட தனி துணை கலெக்டர் (சமூக நலத்துறை) ஜானகிராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பள்ளிப்பட்டு தனி தாசில்தார் சாந்தி, வட்ட வழங்கல் அலுவலர் வெண்ணிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் முதியோர் உதவித்தொகை, புதிய ரே‌ஷன்கார்டு, திருமண உதவித்தொகை, ரே‌ஷன் கார்டில் பெயர் திருத்தம், வீட்டுமனை பட்டா, வங்கி கடன், பட்டா மாற்றம், நலத்திட்ட உதவிகள் கோரி 100–க்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் வருவாய் ஆய்வாளர் மதன், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், முதுநிலை அலுவலர் அற்புதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த குருவராஜகண்டிகை ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் லலிதா தலைமையில் நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் பிரபு, ஜோதி பிரகாசம், ஊராட்சி செயலாளர் ருத்ரையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் முதியோர் உதவித்தொகை தொடர்பாக 15 மனுக்களும், வாரிசு மற்றும் பட்டா மாற்றம் தொடர்பாக 2 மனுக்களும் சேர்த்து மொத்தம் 17 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 2 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு அதற்கான நலத்திட்ட சான்றிதழ்களை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் லலிதா வழங்கினார்.

மற்ற மனுக்கள் மீது பரீசிலனைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னங்காரணை ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் பிரீத்தி தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர்கள் ரவி, கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துயர்துடைப்பு தாசில்தார் லதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், ரே‌ஷன்கார்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை கேட்டு மொத்தம் 58 பேர் துயர்தடைப்பு தாசில்தார் லதாவிடம் மனுக்கள் கொடுத்தனர். இதில் 20 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.

7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதம் உள்ள 31 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. கிராம உதவியாளர் ரகு மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Next Story