சேலத்தில் தனியார் பள்ளி முன்பு விலையில்லா மடிக்கணினி கேட்டு மாணவிகள் மறியல்
சேலம் அரிசிப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி முன்பு விலையில்லா மடிக்கணினி கேட்டு மாணவிகள் மறியல் போராட்டம் நடத்தினர்.
சேலம்,
சேலம் அரிசிப்பாளையத்தில் அரசு நிதியுதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்குவதற்காக பள்ளி நிர்வாகம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதையொட்டி மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழ், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகலுடன் பள்ளிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவிகள் தங்களது பெற்றோருடன் நேற்று பள்ளிக்கு வந்தனர்.
அப்போது குறிப்பிட்ட பிரிவு மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட நிலையில், கணினி அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவை சேர்ந்த மாணவிகளுக்கு மடிக்கணினி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. மடிக்கணினி பெறும் ஆர்வத்துடன் வந்த அப்பிரிவுகளை சேர்ந்த மாணவிகளுக்கு, இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி முன்பு அரிசிப்பாளையம் மெயின் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் விரைந்து வந்து மாணவிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி நேரில் வந்து, அந்த மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று மாணவிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து மாணவிகள் விலையில்லா மடிக்கணினி கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Related Tags :
Next Story