திம்பம் மலைப்பாதையில் வனப்பகுதி சாலையோரம் வந்த யானைகள்
திம்பம் மலைப்பாதையில் வனப்பகுதி சாலையோரம் வந்த யானைகளை செல்போனில் படம் பிடித்த சுற்றுலா பயணிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
பவானிசாகர்,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்டது ஆசனூர் வனச்சரகம். இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, கரடி, காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் சத்தியமங்கலம் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் காய்ந்தன. இதன்காரணமாக யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன.
இந்த நிலையில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக ஆசனூர் வனப்பகுதியில் மழை பெய்து வந்தது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே உள்ள வனக்குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் குளங்களில் நீர் நிரம்பி உள்ளது.
செல்போன் மூலம்...
எனவே யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் போதிய அளவு வனப்பகுதியில் கிடைக்கிறது. இந்த நிலையில் ஆசனூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதி சாலையான திம்பம் மலைப்பாதை ஓரமாக யானைகள் நின்று கொண்டு மரக்கிளை, செடி, கொடிகளை முறித்து தின்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி திம்பம் மலைப்பாதையில் நடக்கின்றது.
அவ்வாறு சாலையோரம் நிற்கும் யானைகளை திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய செல்போன் மூலம் படம் எடுக்கிறார்கள்.
போக்குவரத்துக்கு இடையூறு
சில நேரங்களில் யானைகள் ஆத்திரம் அடைந்து சுற்றுலா பயணிகளை விரட்டும் சம்பவமும் நடைபெறுகிறது. வனப்பகுதி சாலையோரம் வரும் யானை போன்ற வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் செல்போன் மூலம் படம் எடுக்க கூடாது என வனத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் இதை கண்டு கொள்வதில்லை.
இந்த நிலையில் நேற்று திம்பம் மலைப்பாதையில் சாலையோரம் 2 யானைகள் நின்று கொண்டிருந்தன. இந்த யானைகளை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் நின்று கொண்டு செல்போன் மூலம் படம் எடுத்தனர். ஏராளமானோர் திம்பம் மலைப்பாதையில் தங்களுடைய வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

Related Tags :
Next Story