டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான ஆலைக்கு அபராதம் கலெக்டர் பிரபாகர் தகவல்
தாமரைப்பாளையத்தில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான ஆலைக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் ஆர்.டி.ஓ. நர்மதாதேவி மற்றும் தாசில்தார்கள் கொண்ட வருவாய்த்துறையினர் உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறையினருடன் இணைந்து வீதி வீதியாக சென்று கொசு மருந்து தெளிப்பு, வீடு, தொழிற்சாலைகளில் தண்ணீர் தேங்கும் பகுதிகளை சோதனை செய்து வருகிறார்கள்.
இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள், சமூக தொண்டு அமைப்புகள், பொதுநல சங்கங்கள், குடியிருப்போர் சங்கங்கள், வணிக சங்கங்கள், தொழிற்சங்கங்கள் என்று அனைத்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும், மகளிர் சுயஉதவிக்குழுவினரும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கலெக்டர் எஸ்.பிரபாகர் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதன்படி நேற்று முதல் 2 நாட்கள் தீவிர டெங்கு ஒழிப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று காலை 6 மணி முதல் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையிலான அதிகாரிகள் மரவம்பாளையம் உள்பட பல்வேறு இடங்களுக்கும் நேரில் சென்று துப்புரவு பணி, கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று தாமரைப்பாளையத்தில் உள்ள ஒரு ஆலைக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து நேற்று ஈரோட்டில் நடந்த விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் கலெக்டர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. எனினும் டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசுக்களை அழிக்க வேண்டியது உள்ளது.
இதற்கு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஏடிஸ் கொசுக்கள் நன்னீரில் தான் முட்டையிடும். நன்னீரில்தான் கொசு முட்டை (லார்வா) இருக்கும். எனவே வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீரில் டெங்கு கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. குறிப்பாக தண்ணீர் தேங்கி வைக்கும் தரைதள தண்ணீர் தொட்டி, மாடிகளில் உள்ள தண்ணீர் தொட்டி, பூந்தொட்டிகள், தேங்காய் தொட்டிகள், காலி பாட்டில்களில் உள்ள மழை நீர், குளிர்சாதன பெட்டி என்று பல இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது.
இந்த பகுதிகளை சுகாதாரப்பணியாளர்கள் சோதனை செய்ய பெரும்பாலான பொதுமக்கள் அனுமதிப்பது இல்லை. மேலும், வீதியை சுத்தம் செய்யுங்கள், எங்கள் வீடுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்கிறார்கள். எனவே தான் பொதுமக்களும் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீர்தொட்டி, குளிர்சாதன பெட்டியை சோதனை செய்வதுடன், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளாதவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்று (அதாவது நேற்று) காலை கொடுமுடி அருகே உள்ள தாமரைப்பாளையம் பகுதியில் ஒரு சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தகவல் வந்தது. உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு ஒரு தேங்காய்த்தொட்டி ஆலை உள்ளது.
அந்த ஆலையை அதிகாரிகள் சோதனை செய்தபோது உள்ளே பல இடங்களில் தண்ணீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. டெங்கு கொசுப்புழுக்களும் இருந்தன. உடனடியாக அதிகாரிகள் குழுவினர் அந்த இடத்தை சுத்தம் செய்ததுடன், டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான ஆலைக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்தனர். எனவே ஈரோடு மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பில் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

Related Tags :
Next Story