மழைக்காலங்களில் மின்கம்பங்கள், மின்மாற்றிகளை தொடக்கூடாது பொதுமக்களுக்கு அதிகாரி எச்சரிக்கை


மழைக்காலங்களில் மின்கம்பங்கள், மின்மாற்றிகளை தொடக்கூடாது பொதுமக்களுக்கு அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Oct 2017 4:15 AM IST (Updated: 22 Oct 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

கருவேப்பிலங்குறிச்சியில் மின்வாரியம் சார்பில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மழைக்காலங்களில் மின்கம் பிகள், மின்மாற்றிகளை தொடக்கூடாது என பொதுமக்களுக்கு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் மின் வாரியம் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் மற்றும் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு விருத்தாசலம் மின் வாரிய செயற்பொறியாளர் சரவணதுரைமோகன் தலைமை தாங்கினார்.

உதவி செயற்பொறியாளர் பெண்ணாடம் ஜானகிராமன் முன்னிலை வகித்தார். முன்னதாக உதவி மின்பொறியாளர் வில்வனேஸ்வரன் வரவேற்றார்.

அறுந்து கிடக்கும் மின்கம்பிகள்

கூட்டத்தில், செயற்பொறியாளர் சரவணதுரைமோகன் பேசுகையில், அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடக்கூடாது, மழைக்காலங்களில் மின்கம்பங்கள், மின் இழுமுனை கம்பி, மின்மாற்றி வேலி ஆகியவற்றை தொடக்கூடாது மின் கம்பத்திலோ, இழுவை கம்பியிலோ கால்நடைகளை கட்டி வைக்கக்கூடாது, மின்பாதை அருகில் உள்ள மரங்களை மின்வாரிய ஊழியர்களின் உதவியின்றி வெட்டக்கூடாது, மின் கம்பத்தில் கயிறு கட்டி துணிகளை உலர வைக்க கூடாது, மின்பாதையில் இருந்து போதிய இடைவெளி விட்டு கட்டிடம் கட்ட வேண்டும் என்று கூறினார்.

இதில் உதவி பொறியாளர்கள் பன்னீர்செல்வம், மேகநாதன், சக்திவேல், ஜெயகுமார் மற்றும் மின்வாரிய பொறியாளர்கள் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story