டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு தவறி விட்டது வசந்தகுமார் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு தவறி விட்டது வசந்தகுமார் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Oct 2017 4:15 AM IST (Updated: 22 Oct 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு தவறி விட்டது என்று வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.

களியக்காவிளை,

குமரி மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் கூட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதற்கு மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆமோஸ் தலைமை தாங்கினார், துணைத்தலைவர்கள் ராஜரெத்தினம், வக்கீல் பால்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில வர்த்தக காங்கிரஸ் தலைவரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் கலந்து கொண்டு வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- “ஜி.எஸ்.டி. என்பது உலகம் முழுவதும் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. ஆனால் ஜி.எஸ்.டி. பற்றி கருத்து கூறினால் பா.ஜனதா மாநில தலைவர், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆதங்கப்படுவது ஏன் என்று தெரியவில்லை. பிரதமர் நரேந்திர மோடி ஒரு திட்டத்தை நடைமுறை படுத்துகிறார் என்று சொன்னால் அது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற போது ஒரு பாராளுமன்ற உறுப்பினரோ, ஒரு சட்டமன்ற உறுப்பினரோ தான் எதிாப்பு தெரிவிக்க வேண்டும் என்பது இல்லை. சாதாரண மக்களும் எதிர்க்கலாம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதை ஆராய்ந்து மக்களின் நன்மைக்கேற்ப மாற்றுவது தான் அரசினுடைய கடமை. ஆனால் நடிகர் விஜய் ‘மெர்சல்‘ படத்தில் ஜி.எஸ்.டி-ஐ பற்றி கூறிய கருத்திற்கு இவர்கள் ஆதங்க படுவதற்கு எந்த நியாயமும் இல்லை.

மோடி அரசு பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசியது. ஆனால் இன்று அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறி கொண்டிருக்கிறது.

கூட்டணி

நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் கட்சி தொடங்கினால் அவர்களின் கொள்கைகள் காங்கிரஸ் கட்சியுடன் ஒத்துவந்தால் அவர்களுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி தயாராகவே இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த கொலையாளிகளுக்கு உதவி செய்பவர்களை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

அடுத்த மாதம் 21-ந் தேதி ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக நியமிக்கப்படுவார். இதனை இந்தியா முழுவதிலும் உள்ள கோடானு கோடி காங்கிரஸ் கட்சியினர் முழுமனதுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

தவறி விட்டது

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பிற்குள்ளான மக்களை பாதுகாக்க அரசு தவறி விட்டது.

2019-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி மத்தியில் அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story