அணைக்காத சிகரெட்டால் மெத்தை எரிந்தது புகையில் மூச்சுத்திணறி ஒருவர் சாவு
அணைக்காத சிகரெட்டால் மெத்தை எரிந்ததில் புகையில் மூச்சுத்திணறி ஒருவர் உயிரிழந்தார். போதைப்பொருள் புகைத்தனர் மும்பை குர்லா மேற்கு பகுதியை சோந்தவர் பிரதிப்(வயது40). இவர் அங்குள்ள ஸ்ரீராம்பவன் என்ற கட்டிடத்தில் வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு தனது தம
மும்பை,
மும்பை குர்லா மேற்கு பகுதியை சோந்தவர் பிரதிப்(வயது40). இவர் அங்குள்ள ஸ்ரீராம்பவன் என்ற கட்டிடத்தில் வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு தனது தம்பி சுதிப்(35) என்பவருடன் சேர்ந்து போதைப்பொருளை சிகரெட்டில் சேர்த்து புகைத்து உள்ளனர். போதையில் அந்த சிகரெட்டை அணைக்காமல் அப்படியே மெத்தையில் போட்டு உள்ளனர்.
இதில், மெத்தை தீப்பற்றி அதிகளவில் புகை மூட்டம் சூழ்ந்தது. போதைப்பொருள் புகைத்ததால் மயக்க நிலையில் இருந்த அண்ணன், தம்பி இருவருக்கும் மெத்தையில் தீப்பிடித்தது தெரியவில்லை.
இவர்களது வீட்டில் இருந்து அதிகளவில் புகை வருவதை கவனித்த அக்கம்பக்கத்தினர் போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று மயங்கிய நிலையில் கிடந்த இருவரையும் மீட்டனர்.
பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, பிரதிப் இறந்து விட்டதாக கூறினார்கள். அவர் புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானது தெரியவந்தது. சுகித் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே மெத்தையில் எரிந்த தீயை தீயணைப்பு படையினர் அணைத்தனர். சம்பவம் குறித்து குர்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.