தூத்துக்குடி மாவட்டத்தில் வார்டுகளை பிரிப்பது தொடர்பாக அனைத்து கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில், அதிக வாக்காளர்களை கொண்ட வார்டுகளை பிரிப்பது தொடர்பாக நேற்று அனைத்து கட்சியினருடன் கலெக்டர் வெங்கடேஷ் ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகள் நடந்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் உள்ள 1,562 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் செய்யவும் மனு கொடுத்தனர்.
அனைத்து கட்சி கூட்டம்
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் ஆணையர் ராஜேந்திர ரத்னு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதிக வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை பிரிப்பது, வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்வது, வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது, இறந்த வாக்காளர்களை நீக்கம் செய்வது உள்ளிட்டவை குறித்து அரசியல் கட்சியினரிடம் ஆலோசிக்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் கீதாஜீவன் எம்.எல்.ஏ, உதவி கலெக்டர் பிரசாந்த், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜையா, தாசில்தார்கள் மற்றும் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், எஸ்.டி.கணேசன்(தி.மு.க.), சந்தணம்(அ.தி.மு.க), மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story