தந்தையுடன் தூங்கிய சிறுவனை சிறுத்தைப்புலி கவ்விச்சென்று கடித்து கொன்றது


தந்தையுடன் தூங்கிய சிறுவனை சிறுத்தைப்புலி கவ்விச்சென்று கடித்து கொன்றது
x
தினத்தந்தி 23 Oct 2017 4:00 AM IST (Updated: 23 Oct 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

தோட்டத்தில் தந்தையுடன் தூங்கிய சிறுவனை சிறுத்தைப்புலி காட்டுப்பகுதிக்கு கவ்விச்சென்று, கடித்து கொன்றது.

நாசிக்,

நாசிக் மாவட்டம் பத்லானி தாலுகா தல்வாலே– பாமெர் பகுதியை சேர்ந்த 2½ வயது சிறுவன் கோமல். இவன் நேற்று முன்தினம் இரவு வீட்டருகே உள்ளே தோட்டத்தில் தனது தந்தையுடன் தூக்கிக்கொண்டிருந்தான். இந்தநிலையில் நேற்று அதிகாலை அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தைப்புலி ஒன்று, சிறுவன் கோமலை கவ்விக்கொண்டு காட்டுப்பகுதிக்கு ஓடியது. இதைப்பார்த்து சிறுவனின் தந்தை அலறினார்.

சத்தம்கேட்டு ஓடிவந்த கிராமமக்கள் சிறுவனை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று தேடினர். பல மணி நேர தேடுதலுக்கு பின் சிறுவனின் உடலும், தலையும் தனித்தனியாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுத்தைப்புலி சிறுவனை கடித்து கொன்றது தெரியவந்தது

இது குறித்து அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுத்தைப்புலியை பிடிப்பதற்காக அந்த பகுதியில் கூண்டு வைத்தனர்.

சிறுவனை கடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி இதற்கு முன் அந்த பகுதியில் ஆடுகளை மட்டுமே வேட்டையாடி வந்து உள்ளது. தற்போது முதல் முறையாக மனிதவேட்டையில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story