கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 28 Oct 2017 11:00 PM GMT (Updated: 28 Oct 2017 5:15 PM GMT)

களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரே‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

களியக்காவிளை,

குமரி மாவட்டத்தில் ரே‌ஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதை தடுக்க மாவட்டத்தின் எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வருவாய்துறை அதிகாரிகளும், போலீசாரும் வாகன சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

பளுகல் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் களியக்காவிளை அருகே மூவோட்டுகோணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு பால் வேன் வேகமாக வந்தது. போலீசார் அதை நிறுத்துமாறு கைகாட்டினர். போலீசாரை கண்டதும், டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

தொடர்ந்து, வேனை சோதனையிட்ட போது, அதில் மூடைகளில் 1½ டன் ரே‌ஷன் அரிசி இருந்தது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. போலீசார் அரிசியுடன் வேனையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி காப்புகாடு அரசு குடோனில் ஒப்படைக்கப்பட்டது.

 இதுதொடர்பாக பளுகல் போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story