ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் சிறைபிடித்து விடுவிப்பு


ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் சிறைபிடித்து விடுவிப்பு
x
தினத்தந்தி 28 Oct 2017 10:30 PM GMT (Updated: 2017-10-29T00:08:09+05:30)

ராமேசுவரத்தில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு விசாரணைக்கு பின் இலங்கை கடற்படை விடுவித்தது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 5 பேர் அர்த்தநாஸ் என்பவரது படகில் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களையும் படகையும் சிறைபிடித்தனர். அப்போது மீனவர்கள் அச்சத்தில் கடலில் குதித்தனர். அவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கொண்டு சென்று விசாரணை செய்தனர்.

விசாரணைக்கு பின்னர் 5 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். இதுபற்றி மீன்துறை உதவி இயக்குனர் கூறுகையில், ‘பிடிபட்டதாக கூறப்படும் மீனவர்கள் டோக்கன் பெறாமல் கடலுக்கு சென்று உள்ளனர்’ என்றார்.


Next Story