வஞ்சிபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்


வஞ்சிபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2017 10:15 PM GMT (Updated: 2017-10-29T00:20:26+05:30)

வஞ்சிபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது வஞ்சினபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் கடந்த 2016-17-ம் ஆண்டில் நடைபெற்ற 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளை சமூக தணிக்கை செய்தனர். அதனை தொடர்ந்து சிறப்பு கிராமசபை கூட்டம் சேவை மைய அலுவலகம் அருகே நடைபெற்றது. கிராமசபை கூட்டத்திற்கு ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வள அலுவலர் பூபாலன் அனைவரையும் வரவேற்று தணிக்கை செய்த புள்ளி விவரங்களை கிராமசபை கூட்டத்தில் தாக்கல் செய்தார். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிவேல் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டு தணிக்கை குறித்து விவாதம் செய்தனர். கூட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் உள்ள குறைபாடுகளை தணிக்கை குழுவினர் சுட்டிக்காட்டினார்கள். வேலைக்கான வருகை பதிவேட்டில் கையெழுத்து போட தெரிந்தவர்களும் கைநாட்டு வைப்பதை தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலாளர் கோடி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story