அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம்


அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 28 Oct 2017 10:30 PM GMT (Updated: 28 Oct 2017 6:50 PM GMT)

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி புரியும் சிறப்பு பணி யாளர்கள், தூய்மை காவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு பயிற்சி மற்றும் முகாம் நடைபெற்றது. மாவட்ட உதவி திட்ட மேலாளர் வர்க்கீஸ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன் முன்னிலை வகித்தார். தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன் வரவேற்று பேசினார். தா.பழூர் வட்டார மருத்துவ அலுவலர் தட்சிணா மூர்த்தி டெங்கு காய்ச்சல் எதனால் பரவுகிறது, ஏ.டி.எஸ். கொசு எவ்வாறு உற்பத்தி ஆகிறது, நோயிலிருந்து முன் னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது எப்படி, நோய் வந்தபின் பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் மற்றும் கருத்துகள் மூலமாக பணியாளர்களுக்கு விளக்க மளித்தார்.

இதில் சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊரக வளர்ச்சி துறை, சுகாதார துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகள் சுகாதார உறுதி மொழியை எடுத்து கொண்டனர்.

ஊர்வலம்

இதேபோல் ஜெயங்கொண் டம் தனியார் கலைக் கல்லூரி சார்பில் டெங்கு பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கல்லூரி தாளாளர் சிலம்பு செல்வன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரி யில் இருந்து தொடங்கிய ஊர்வலம் சிதம்பரம் ரோடு, திருச்சி ரோடு, தா.பழூர் ரோடு, விருத்தாசலம் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது மாணவ, மாணவிகள் கையில் பதாகைகள் ஏந்தி டெங்கு பற்றிய துண்டு பிரசு ரங்களை வழங்கி கோஷ மிட்டவாறே சென்றனர்.

திருமானூர்

திருமானூர் அருகேயுள்ள கீழப்பழுவூர் அரசு மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் அக்பர்கான் தலைமை தாங்கி னார். வட்டார வளர்ச்சி அலு வலர்கள் அகிலா, ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் லதா ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த விழிப்பு ணர்வு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந் தது. ஊர்வலத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்தும், டெங்கு உருவாகும் விதம் குறித்தும் கோஷமிட்டவாறே மாணவர்கள் சென்றனர். அதை தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் மணி வண்ணன், அரசு மருத்துவர்கள் முபாரக், ஜெயலட்சுமி ஆகியோர் டெங்கு காய்ச்சல் பற்றியும், அதனை தடுக்கும் முறைகள் குறித்தும் மாணவர் களுக்கு எடுத்துரைத்தனர்.

லெப்பைக்குடிக்காடு

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு பேரூராட் சியில் டெங்கு தடுப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி தலைமை தாங்கி னார். தொடர்ந்து மெயின் ரோடு, தெற்கு தெரு, கிழக்கு தெரு, அரங்கூர் பாதை, ஜமாலியா நகர் உள்பட 15 வார்டுகளில் பேரூராட்சி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில், உதவியாளர் குமார் மற்றும் பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பேரா சிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தினர். முகாமில் பொதுமக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 

Related Tags :
Next Story