தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 Oct 2017 9:00 PM GMT (Updated: 2017-10-29T00:28:00+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை பெரியார் விருதை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை பெரியார் விருதை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

பெரியார் விருது

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிப்பதற்காக ஆண்டுதோறும் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.1 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதை பெற தகுதியானர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

விண்ணப்பம்

எனவே இந்த விருதை பெற தகுதியான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தை சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம், கல்வி மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சிகள், அந்த மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொண்ட பணிகள், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு, கலை, இலக்கியம், சமூக பணி ஆகியவற்றில் உள்ள ஈடுபாடு மற்றும் கடந்த ஆண்டுகளில் தாங்கள் மேற்கொண்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் தங்களின் பெயர், படிப்பு, தொழில் உள்ளிட்ட சுயவிவரம் மற்றும் முழுமுகவரியுடன் அடுத்த மாதம் (நவம்பர்) 30–ந்தேதிக்குள் மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறி உள்ளார்.


Next Story