பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2017 9:30 PM GMT (Updated: 2017-10-29T01:12:33+05:30)

பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பெருந்துறை,

பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். உணவுப்பொருள் வழங்கும் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஸ்மார்ட் கார்டில் உள்ள ஏராளமான குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு ரே‌ஷன் கடையில் அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் 15–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story