சர்வதேச பல் மருத்துவ தேர்வாளராக டாக்டர் குணசீலன் நியமனம்


சர்வதேச பல் மருத்துவ தேர்வாளராக டாக்டர் குணசீலன் நியமனம்
x
தினத்தந்தி 28 Oct 2017 11:45 PM GMT (Updated: 2017-10-29T01:45:19+05:30)

சர்வதேச பல் மருத்துவ தேர்வாளராக இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் குணசீலன் மட்டுமே.

சென்னை, 

‘டென்டல் இம்ப்ளான்ட்’ எனப்படும் ‘பல் உள் வைப்பு’ தொழில்நுட்பம் பல் மருத்துவ சிகிச்சையில் மிக வேகமாக வளர்ந்துவரும் சிறப்பு பல் மருத்துவப்பிரிவாகும். இந்த சிகிச்சை மூலம் பல் இழந்தவர்களுக்கு நவீன தொழில் நுட்பத்தின் மூலம் ஈறுகளில் செயற்கை பற்கள் பதியவைக்கப்படுகிறது.

இந்த பல் மருத்துவக் கல்விப்பிரிவுக்கான சர்வதேச தேர்வை ‘தி ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் ஆப் எடின்பர்க்’ நடத்துகிறது. எடின்பர்க், துபாய், சிட்னி போன்ற உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இருக்கும் ‘ராயல் ஆஸ்திரலேசியன் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ்’-ல் நடைபெற்றது.

இதில், ஆஸ்திரேலியா, ஹாங்காங், நியூசிலாந்து நாடுகளைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள். இந்தத் தேர்வை நடத்தவும், கண் காணிக்கவும் உலகெங்கும் இருந்து 5 முன்னணி பல் மருத்துவ நிபுணர்கள் தேர்வாளராக நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர், சென்னையில் உள்ள ராஜன் டென்டல் இன்ஸ்டிடியூட் தலைவர் டாக்டர் குணசீலன் ராஜன் மட்டுமே. இவர் மற்ற பல் மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து இந்த தேர்வை நடத்தினார். 

Next Story