உத்தனப்பள்ளி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது


உத்தனப்பள்ளி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2017 10:15 PM GMT (Updated: 2017-10-29T01:58:42+05:30)

உத்தனப்பள்ளி அருகே வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி போலீசார் தர்மபுரி - ஓசூர் நெடுஞ்சாலையில் லாலிக்கல் கிராமம் அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார்சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மாரண்டஅள்ளியைச் சேர்ந்த விஜய் (வயது 22), தினேஷ் (19), கருப்பண்ணன் என்கிற ஆனந்த் (19) மற்றும் கார்த்திக் (19) என்பது தெரிய வந்தது.

4 பேர் கைது

மேலும் இவர்கள் லாலிக்கல் பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார்சைக்கிள்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Related Tags :
Next Story