காஞ்சீபுரத்தில் போலீசாருக்கான குறை தீர்க்கும் முகாம் டி.ஜி.பி. ராஜேந்திரன் பங்கேற்பு


காஞ்சீபுரத்தில் போலீசாருக்கான குறை தீர்க்கும் முகாம் டி.ஜி.பி. ராஜேந்திரன் பங்கேற்பு
x
தினத்தந்தி 28 Oct 2017 9:38 PM GMT (Updated: 2017-10-29T03:08:13+05:30)

காஞ்சீபுரம் ஆயுதப்படை மைதானத்தில் வடக்கு மண்டல போலீஸ் அதிகாரிகள், போலீசாருக்கான குறை தீர்க்கும் முகாம் நடந்தது.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் ஆயுதப்படை மைதானத்தில் வடக்கு மண்டலத்தில் உள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், போலீசாருக்கான குறை தீர்க்கும் முகாம் நடந்தது.

முகாமில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் கலந்துகொண்டு போலீசாரிடம் இருந்து பணியிடமாற்றம், பதவி உயர்வு, ஊதிய முரண்பாடு, தண்டனை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார். ஒவ்வொருவரிடமும் தனித்தனியே மனுக்களை பெற்று அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். முகாமில் 484 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றின் மீது தகுதி அடிப்படையில் தீர்வு காணப்படும் என்று டி.ஜி.பி. தெரிவித்தார்.

முகாமில், வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, சென்னை காவல்துறை உதவித்தலைவர் (நிர்வாகம்) முத்தரசி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Next Story