என்ஜினில் இருந்து புகை வருவதாக கூறி கார் ஓட்டிகளிடம் நூதன முறையில் மோசடி 2 பேர் கைது

என்ஜினில் இருந்து புகை வருவதாக கூறி கார் ஓட்டிகளிடம் நூதன முறையில் மோசடி  2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2017 9:39 PM GMT (Updated: 2017-10-29T03:09:40+05:30)

என்ஜினில் இருந்து புகை வருவதாக கூறி கார் ஓட்டிகளிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை,

என்ஜினில் இருந்து புகை வருவதாக கூறி கார் ஓட்டிகளிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புகை வருவதாக கூறி மோசடி

மும்பை மேற்கு விரைவு நெடுஞ்சாலையில் செல்லும் விலை உயர்ந்த சொகுசு கார்களை குறிவைத்து ஒரு கும்பல் நூதன முறையில் மோசாடி செய்து வந்தது.

அதாவது மோட்டார் சைக்கிளில் காரை பின் தொடர்ந்து செல்லும் கும்பல் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து என்ஜினில் இருந்து புகை வருவதாக கூறி காரை நிறுத்த செய்வார்கள். பின்னர் காரை பழுது பார்ப்பதாக கூறி வாகன உரிமையாளரிடம் பணத்தை பறித்து செல்வார்கள். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரிஸ்வான் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

2 பேர் கைது

போலீசார் அந்த புகாரின் பேரின் விசாரணை நடத்தினர். இதில் 8 பேர் கும்பல் இந்த மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது தெரியவந்தது. மேலும் இந்த கும்பலை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது சேக், ரகுமான் ஆகியோர் அடையாலம் காணப்பட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கும்பரை 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story