கம்பளி தானம்


கம்பளி தானம்
x
தினத்தந்தி 29 Oct 2017 9:00 AM GMT (Updated: 2017-10-29T14:04:41+05:30)

கனடாவின் ஹாலிபாக்ஸ், நோவா ஸ்காடியா போன்ற பகுதிகளில் வசிக்கும் சிறுவர், சிறுமிகள் குழுக்களாக சேர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

னடாவின் ஹாலிபாக்ஸ், நோவா ஸ்காடியா போன்ற பகுதிகளில் வசிக்கும் சிறுவர், சிறுமிகள் குழுக்களாக சேர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி கொண்டிருப்பதால், இப்போதிலிருந்தே கிறிஸ்துமஸ் பரிசுகளை சேகரிக்க தொடங்கிவிட்டனர். குளிருக்கு இதமான கம்பளி ஆடைகள், மழைக்கு ஈடுகொடுக்கும் ஜெர்கின்கள் போன்றவை தான் இவர்களது இலக்கு. அவற்றை சேகரிப்பதற்காக கனடாவின் பல நகரங்களில் உலா வருகிறார்கள். இந்த குழுவை டாரா என்ற 8 வயது சிறுமி தலைமையேற்று வழிநடத்துகிறாள்.

“வசதி படைத்தவர்கள், வசதி இல்லாதவர்களுக்கு உதவிட வேண்டும் என்று என் தந்தை அடிக்கடி கூறுவார். அதை அடிப்படையாகக் கொண்டே கிறிஸ்துமஸ் பரிசுகளை சேகரித்து வருகிறோம். எங்களுடைய தேடல் குளிரை தாங்கக் கூடிய கம்பளி உடைகள் தான். ஏனெனில் கனடாவில் உணவு இல்லாமல் சில மணி நேரங்கள் தாக்குப்பிடித்து விடலாம். ஆனால் கதகதப்பான கம்பளி உடைகள் இல்லாமல் உயிர் வாழ முடியாது. அதனால் தான் கம்பளி உடைகளை தேடித்தேடி சேகரிக்கிறோம். நாங்கள் சேகரிக்கும் பொருட்கள் அனைத்தையும் சாலையோரத்தில் இருக்கும் மின் கம்பங்களில் தொங்கவிட்டு விடுவோம். யாருக்கு தேவையோ அவர்கள் எடுத்து பயன் பெறுவார்கள். கிறிஸ்துமஸ் பரிசுகளை, சாண்டா கிளாஸ் தாத்தா மட்டுமே தருவார் என்று எதிர்பார்க்கக்கூடாது. கிறிஸ்துமஸ் கொண்டாடுகிற அனைவருமே பரிசுகளை வாரி வழங்க வேண்டும்” என்று பொறுப்பாக பேசுகிறாள், டாரா. 

Next Story