சிறப்பு பெறும் சிலம்பம்


சிறப்பு பெறும் சிலம்பம்
x
தினத்தந்தி 29 Oct 2017 10:00 AM GMT (Updated: 2017-10-29T14:22:49+05:30)

தமிழகத்தின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம் வட மாநில மாணவ-மாணவி களும் விரும்பி விளையாடும் விளையாட்டாக மாறிக் கொண்டிருக்கிறது.

மிழகத்தின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம் வட மாநில மாணவ-மாணவி களும் விரும்பி விளையாடும் விளையாட்டாக மாறிக் கொண்டிருக்கிறது. மராட்டிய அரசாங்கம் பள்ளி பாடத்திட்ட விளையாட்டு பட்டியலில் சிலம்பத்தையும் சேர்த்திருக்கிறது. அதனால் அங்கு சிலம்பம் கற்பவர்களின் எண்ணிக்கை பெருகி கொண்டே இருக்கிறது. உள்ளூர் போட்டிகளில் மட்டுமின்றி சர்வதேச அளவிலான சிலம்ப போட்டிகளிலும் அங்குள்ள மாணவிகள் பங்கேற்று பரிசுகளை குவித்து கொண்டிருக்கிறார்கள்.

புனேவை சேர்ந்த மாணவிகள் அனுஷ்கா மேனே, சமிக்‌ஷா சுகாதே, கோமல் ஷிண்டே ஆகியோர் மராட்டிய மாநில அரசின் சிறந்த சிலம்பாட்ட வீரர்களுக்கான விருதை பெற்றிருக்கிறார்கள். புனேவை சேர்ந்த குந்த்லிக் மரோட்ரோ என்பவர் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். கபடி வீரரான இவர், சிலம்பத்திலும் தேர்ச்சி பெற்றவர். பள்ளி மாணவ-மாணவிகள் சிலம்பம் கற்க ஆர்வம் காட்டுவதால் அவர்களுக்கு பயிற்சியாளராக மாறிவிட்டார். “சிலம்பாட்டத்தை மாணவ-மாணவிகள் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். இது ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கிறது. சிறந்த தற்காப்பு கலையாகவும் அமைந்திருக்கிறது. இதனை கற்றுக்கொண்டால் ஆயுதம் இன்றி கூட மற்றவர்களிடம் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம்” என்கிறார். 

Next Story