சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல் ஆந்திர வாலிபர் கைது


சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல் ஆந்திர வாலிபர் கைது
x
தினத்தந்தி 1 Nov 2017 4:00 AM IST (Updated: 1 Nov 2017 1:25 AM IST)
t-max-icont-min-icon

சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆந்திர வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சவுதி அரேபியாவில் இருந்து கொழும்பு வழியாக விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த ஆந்திராவை சேர்ந்த சோட்டாபீர் முல்லாவை (வயது 30) அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்த காபி தயாரிக்கும் கோப்பையை பிரித்து பார்த்தபோது அதில் 680 கிராம் தங்க கட்டி இருந்தது. ரூ.20 லட்சம் மதிப்புள்ள அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சோட்டாபீர் முல்லாவை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த சென்னையை சேர்ந்த ஜெய்னுலாப்தீனின் (35) பெட்டியில் காகிதங்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.1¼ லட்சத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story