வாழ்க்கை அனுபவங்களை இளைஞர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் கலெக்டர் பேச்சு


வாழ்க்கை அனுபவங்களை இளைஞர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 1 Nov 2017 4:15 AM IST (Updated: 1 Nov 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

முதியோர்கள் வாழ்க்கை அனுபவங்களை இளைஞர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என சர்வதேச முதியோர் தின விழாவில் கலெக்டர் பேசினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கிரேஸ் முதியோர் இல்லத்தில் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தின விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு பேசுகையில், “உலகளவில் முதியோர்கள் மீதான கவனம் குறைந்து வருகிறது. முதியோர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். முதியோர்களை பார்த்து இளைஞர் சமுதாயம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். முதியோர்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கை அனுபவங்களை இளைஞர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும்” என்றார்.

விழாவை முன்னிட்டு முதியோர்களுக்கு இசை நாற்காலி, பந்து விளையாட்டு போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்ளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார். மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து முதியவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறந்த முறையில் முதியோர் இல்லம் நடத்தி வரும் தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து டெங்கு விழிப்புணர்வு குறித்த குறு நாடகமும் நடந்தது. கலை நிகழ்ச்சி மற்றும் குறு நாடகத்தில் கலந்து கொண்டவர்களை கலெக்டர் பாராட்டினார்.

விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டினா தா.டார்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோகிலா, பாதுகாப்பு அலுவலர் கோமதி, அரசு வக்கில் அர்ச்சனா, தொண்டு நிறுவனங்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் முதியோர்கள் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story