சேலம் சரகத்தில் 12 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் டி.ஐ.ஜி. செந்தில்குமார் உத்தரவு


சேலம் சரகத்தில் 12 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் டி.ஐ.ஜி. செந்தில்குமார் உத்தரவு
x
தினத்தந்தி 1 Nov 2017 3:45 AM IST (Updated: 1 Nov 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 12 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம்,

சென்னை மண்டலத்தில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.சரோஜா, தர்மபுரி மாவட்டத்தில் பெண்களுக்கு ஏற்படும் குற்றங்கள் தடுப்பு பிரிவிற்கும், மதுரை மாவட்டம் ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன், சேலம் மாவட்டம் தலைவாசலுக்கும், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் எஸ்.சிவகாமிராணி, சேலம் மாவட்டம் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், மதுரை மாவட்டம் திருமங்கலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.ரவி, கிருஷ்ணகிரி மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவிற்கும், திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி இன்ஸ்பெக்டர் பி.சுகுமார், நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும், மோகனூரில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் டி.இளங்கோ, தர்மபுரி கடுங்குற்றம் தடுப்பு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் எம்.சரவணரவி, கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவுக்கும், அங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் எம்.சிவக்குமார், தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கும், ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏ.கணேசன், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கும், நாகப்பட்டினத்தில் பணியாற்றிய மணிமேகலா, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவிற்கும், நீலகிரியில் பணியாற்றிய வந்த டி.வீரம்மாள், சேலம் மாவட்டம் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், சென்னை கொளத்தூரில் பணியாற்றிய வி.ஜோதிலட்சுமி, நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 12 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார் பிறப்பித்துள்ளார். 

Next Story