சம்பா, தாளடி சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்ய காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்
சம்பா, தாளடி சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்ய விதிக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.
கபிஸ்தலம் ,
கபிஸ்தலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சேக்அலாவுதின் தலைமை தாங்கினார். கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விஜயாள், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சதாசிவம் கட்சி கொடியேற்றினார். ஒன்றிய செயலாளர் காதர் உசேன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால், மாவட்ட செயலாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பயிர்க் காப்பீடு
பாபநாசம் ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து வாய்க்கால்கள், குளங்களை தூர்வார வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பு பணியை துரிதபடுத்த வேண்டும். சம்பா, தாளடி சாகுபடிக்கு விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு செய்ய விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலையை அதிகரித்து சம்பளம் பட்டுவாடா செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story