சீல் வைக்கப்பட்ட நாகை தீயணைப்பு நிலையம் இடிந்து விழுந்தது
நாகையில் சீல் வைக்கப்பட்ட தீயணைப்பு நிலையம் இடிந்து விழுந்தது. முன்னெச்சரிக்கையாக சீல் வைக்கப்பட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் சுதந்திரமடைவதற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களில்தான் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறையாறில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். அதைதொடர்ந்து கடந்த 21-ந்தேதி நாகையில் உள்ள தீயணைப்பு நிலைய மேற்கூரை சிமெண்டு காரைகள் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதைதொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகைக்கு வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பழமையான கட்டிடங்கள் அனைத்தும் தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இடிக்கப்படும் என்று கூறினார்.
பழமையான நாகை தீயணைப்பு நிலையத்தையும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ., ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள நாகை தீயணைப்பு நிலையத்தை உடனடியாக சீல் வைக்க அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உத்தரவிட்டார். அதைதொடர்ந்து தீயணைப்பு நிலையம் சீல் வைக்கப்பட்டு, நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை தீயணைப்பு நிலையத்தின் ஒரு பகுதியில் உள்ள மேற்கூரை திடீரென முற்றிலும் இடிந்து விழுந்தது. ஏற்கனவே தீயணைப்பு நிலையம் சீல் வைக்கப்பட்டதால், அங்கு யாரும் இல்லை. முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த கட்டிடம் முற்றிலும் பழுதடைந்துள்ளதால் நேற்று பொக்லின் எந்திரத்தின் மூலம் கட்டிடம் முழுவதும் இடிக்கப்பட்டது.
தீயணைப்பு நிலையம் கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன்பாக கட்டிடத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ.க்கு தீயணைப்புத்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Related Tags :
Next Story